அரியலூரில் 445 மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் தொடக்கம்

அரியலூர் மாவட்டத்தில் 2-ம் கட்டமாக 445 மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.;

Update:2023-02-09 00:00 IST

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராம், இந்து கல்லூரியில் நேற்று நடைபெற்ற விழாவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வீதம் உதவி தொகை வழங்கும் "புதுமை பெண்" 2-ம் கட்ட திட்டத்தினை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சி அரியலூர் மாவட்டத்தில் வாலாஜாநகரத்தில் திருமண மண்டபத்திலும் காணொலி காட்சி மூலமாக ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. பின்னர் புதுமை பெண் திட்டத்தில் 2-ம் கட்டமாக அரியலூர் மாவட்டத்தில் 445 மாணவிகளுக்கு கலெக்டர் ரமணசரஸ்வதி, சின்னப்பா எம்.எல்.ஏ. முன்னிலையில் மாதம் ரூ.1,000 வீதம் உதவி தொகைக்கான வங்கி பற்று அட்டையினை வழங்கினர். ஏற்கனவே முதற்கட்டமாக புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்டத்தில் 886 மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வீதம் உதவித்தொகை பெறுவதற்கான வங்கி பற்று அட்டை வழங்கப்பட்டு, அவர்கள் கல்வி உதவித்தொகை பெற்று வருகின்றனர். இதில் மாவட்ட சமூக நல அலுவலர் பூங்குழலி மற்றும் அரசு அலுவலர்கள், கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்