தேனியில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் கூட்டம்

தேனியில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் கூட்டம் நடந்தது;

Update:2022-10-06 22:15 IST

108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்பில், கலந்தாய்வு கூட்டம் தேனியில் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் பாண்டி தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஊதிய உயர்வு வழங்க வேண்டும், தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் இந்த கோரிக்கைகள் தொடர்பாக மண்டல அளவில் நடைபெறும் போராட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்