மாணவ-மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்

ராசிபுரம் அரசு கல்லூரியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாணவ, மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-10-06 18:45 GMT

ராசிபுரம்

அரசு கல்லூரி

ராசிபுரம் அருகே உள்ள ஆண்டகளூர்கேட்டில் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியில் சேலம், நாமக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கல்லூரியில் கழிப்பறை வசதி, தரமான உணவு, பஸ் வசதி, காலிப் பணியிடங்களுக்கு ஆசிரியர்கள் நியமனம் செய்தல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை செய்து தரக் கோரி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் கல்லூரி நிர்வாகத்திடம் பல முறை கோரிக்கை மனு அளித்தனர். ஆனால் இதுவரை கல்லூரி நிர்வாகம் எந்தவிதவித நடவடிக்கையும் எடுப்படவில்லை என்று கூறியும் இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்லூரிக்குள் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

உள்ளிருப்பு போராட்டம்

மேலும் இதில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் என பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ராசிபுரம் தாசில்தார் சரவணன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள், கல்லூரி ஆசிரியர்கள் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பிறகு மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார். இதையடுத்து மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டனர். ராசிபுரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்