கடலையூரில்மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
கடலையூரில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடந்தது.;
நாலாட்டின்புத்தூர்:
கடலையூர் மின்வாரிய அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கோவில்பட்டி மின் வாரிய செயற்பொறியாளர் காளிமுத்து தலைமை தாங்கினார். உதவி செயற்பொறியாளர்கள் மிகாவேல், குருசாமி, தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், கடலையூர் பகுதியில் உள்ள மின் கம்பங்களில் தொய்வாக உள்ள ஒயர்களை சீரமைத்தல், பழுதான மின்கம்பங்களை அகற்றிவிட்டு, புதிய கம்பங்களை நடவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்கள் கொடுக்கப்பட்டது. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில் உதவி மின் பொறியாளர் சாய்முருகன் மற்றும் மின்நுகர்வோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.