எண்ணமங்கலம் பகுதியில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை 1,500 வாழைகள் முறிந்து சேதம்

எண்ணமங்கலம் பகுதியில் சூறாவளிக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் 1,500 வாழைகள் முறிந்து விழுந்து சேதம் ஆனது.;

Update:2023-06-06 03:00 IST

அந்தியூர்

எண்ணமங்கலம் பகுதியில் சூறாவளிக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் 1,500 வாழைகள் முறிந்து விழுந்து சேதம் ஆனது.

சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை

அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 3.30 மணிக்கு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது சூறாவளிக்காற்றும் வீசியது. இந்த மழை 4.30 மணி வரை நீடித்தது.

சூறாவளிக்காற்று காரணமாக எண்ணமங்கலத்தை அடுத்த அணைக்கரடு பகுதியில் 1,500 வாழைகள் முறிந்து விழுந்து சேதம் ஆனது.

குளிர்ந்த காற்று வீசியது

இதேபோல் ஆப்பக்கூடல், வேம்பத்தி, வெள்ளாளபாளையம், கரட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

கடந்த 2 நாட்களாக வெயில் அடித்து வந்த நிலையில் நேற்று பெய்த மழை காரணமாக அந்தியூர், ஆப்பக்கூடல் சுற்றுவட்டார பகுதிகளில் குளிர்ந்த காற்று வீச தொடங்கியது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்