வயல்களில் வாத்து கிடை அமைப்பதில் விவசாயிகள் ஆர்வம்

கம்பம் பகுதியில் வயல்களில் வாத்து கிடை அமைப்பதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.;

Update:2023-04-08 00:30 IST

நெல் அறுவடை பணி

தேனி மாவட்டத்தில் முல்லைப்பெரியாறு அணை தண்ணீர் மூலம் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலப்பரப்பில் இருபோக நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு முதல்போக சாகுபடி பணிகள் முடிவடைந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 2-ம் போக சாகுபடி பணிகள் தொடங்கியது.

தற்போதுஅறுவடைக்கு தயாரானதையடுத்து கம்பம், சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, தொட்டன்மன்துறை, காமயகவுண்டன்பட்டி, அண்ணாபுரம், சின்னவாய்க்கால் பகுதியில் எந்திரங்கள் மூலம் நெல் அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ளன.

வாத்து கிடை அமைக்க ஆர்வம்

அறுவடை முடிந்த வயல்களில் நிலங்களை தரிசாக விடாமல் ஆடு மற்றும் வாத்துக்களின் கிடைகள் அமைப்பதில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஏனென்றால், அதன் எச்சங்களை சிறந்த உரமாக்கி அதிக மகசூல் பெறலாம் என்று கிடை அமைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அதன்படி கம்பம் ஊமையன் வாய்க்கால், உத்தமுத்து பாசன பரவு சின்னவாய்க்கால், உடைப்படி குளம் ஆகிய பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட வயல்களில் வாத்து கிடை அமைக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து வாத்து மேய்ப்பவர்கள் கூறுகையில், வாத்துகள் வயல்வெளிகளில் உள்ள புழு, மற்றும் பூச்சிகளை இரைகளாக உட்கொள்ளும்போது அவையிடும் முட்டை அளவு பெரிதாக உள்ளன. இதனால் அறுவடை செய்யப்பட்ட வயல்வெளிகளில் கிடை அமைத்துள்ளோம், என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்