சிவந்தி மெட்ரிக் பள்ளியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி
சேரன்மாதேவி சிவந்தி மெட்ரிக் பள்ளியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.;
சேரன்மாதேவி:
சேரன்மாதேவி சிவந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அப்துல் கலாமின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. சமூக ஆர்வலர் திருமாறன் மரம் நடுதலின் அவசியம் மற்றும் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். பள்ளி முதல்வர் மரிய ஹெலன் சாந்தி முன்னிலையில் இளஞ்செஞ்சிலுவை சங்கம் மற்றும் சாரண-சாரணிய மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டினர். தொடர்ந்து சாரண-சாரணியர் மற்றும் இளஞ்செஞ்சிலுவை பொறுப்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.