தாளமுத்துநகரில் கஞ்சா விற்ற தாய், மகன் கைது

தாளமுத்துநகரில் கஞ்சா விற்ற தாய், மகன் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-11-29 18:45 GMT

தாளமுத்துநகர்:

தூத்துக்குடி தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முனியசாமி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, லூர்தம்மாள்புரம் பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் அருகே கஞ்சா விற்றுக் கொண்டு இருந்த லூர்தம்மாள்புரத்தை சேர்ந்த நாகூர் ஹனிபா மனைவி பாத்திமா என்ற லைலா (வயது 47), அவரது மகன் யாசர் அராபத் (26) ஆகிய 2 பேரையும் போலீசார் மடக்கி பிடித்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து தாய், மகனை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 45 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்