வேதாரண்யத்தில், ஒரு டன் குப்பைகள் அகற்றம்

வேதாரண்யத்தில், ஒரு டன் குப்பைகள் அகற்றப்பட்டன.

Update: 2023-09-16 19:15 GMT

கடற்கரை தூய்மை தினத்தையொட்டி வேதாரண்யம் நகராட்சி தோப்புத்துறை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தேசிய பசுமை படை மாணவர்கள் வேதாரண்யம் கடற்கரையில் தூய்மை பணி மேற்கொண்டனர். நிகழ்ச்சிக்கு மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் உதவி பொறியாளர் திலீப் குமார் தலைமை தாங்கினார். அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் கண்ணையன் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் கவிநிலவன், மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் மற்றும் நகராட்சி தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர். அப்போது கடற்கரையில் இருந்து ஒரு டன் குப்பைகள் அகற்றப்பட்டு, நகராட்சி குப்பை கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாணவர்கள் குப்பை கிடங்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு குப்பைகளை தரம் பிரித்து உரமாக்கும் விதம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. முடிவில் ஆசிரியர் ரங்கசாமி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்