புதிய சாலை அமைக்கும் பணி தொடக்க விழா
பாளையங்கோட்டையில் புதிய சாலை அமைக்கும் பணி தொடக்க விழா நடைபெற்றது.;
பாளையங்கோட்டை 32-வது வார்டு காரிய நாயனார் தெருவில் மாநகராட்சி சார்பில், ரூ.20 லட்சம் செலவில் புதிய பேவர் பிளாக் சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான தொடக்க விழா நேற்று நடைபெற்றது. நெல்லை மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார். கவுன்சிலர் அனுராதா சங்கர பாண்டியன் முன்னிலை வகித்தார்.
முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன், அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, பாளையங்கோட்டை மண்டல தலைவர் பிரான்சிஸ் ஆகியோர் பணியை தொடங்கி வைத்தனர்.
இதில் பாளையங்கோட்டை மண்டல உதவி ஆணையாளர் காளிமுத்து, இளநிலை பொறியாளர் தனராஜ் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.