பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து ஒரே நாளில் 5 ஆயிரம் கனஅடி அதிகரிப்பு

Update: 2024-05-23 02:29 GMT

 ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய அணையாக பவானிசாகர் அணை உள்ளது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து ஒரே நாளில் 5 ஆயிரம் கனஅடி அதிகரித்துள்ளது. நேற்று 1,316 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது 6,357 கன அடியாக உயர்ந்துள்ளது.

பில்லூர் அணையில் இருந்து நேற்று மாலை முதல் பவானி ஆற்றில் 3,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதால் பவானி ஆறு மற்றும் மாயாற்றில் நீர்வரத்து வெகுவாக அதிகரித்துள்ளது. பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாசனப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்