ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்
கோவை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் நேற்று காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.;
கோவை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் நேற்று காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
தனியாரிடம் ஒப்படைக்க முடிவு
கோவை மாநகராட்சியில் 3,600 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், மாநகரில் குப்பைகள் அகற்றும் பணிகளை தனியார் வசம் ஒப்படைக்க உள்ளதாக தகவல் வெளியானது.
எனவே தூய்மை பணியில் தனியார் மயத்தை கைவிட வேண் டும். ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் நேற்று முதல் காலவரை யற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்தனர்.
முற்றுகையிட்டனர்
இதைத்தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் சங்கத்தினருடன் மாநகராட்சி அதிகாரிகள், தொழிலாளர் நலத்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் எந்த தீர்வும் எட்டப்பட வில்லை.
இதனால் கோவையில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் நேற்று காலை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
காலையிலேயே ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர் கள் கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் மாநகராட்சி அலுவலகத்துக்குள் செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது தமிழக அரசாணை 152-ஐ ரத்து செய்ய வேண்டும். தூய்மை பணியை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் என்று கோஷமிட்டனர்.
தொழிற்சங்கங்கள்
போராட்டத்தில் கோவை லேபர் யூனியன், கோவை மாவட்ட ஜீவா முனிசிபல் தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு அண்ணல் அம் பேத்கர் சுகாதார துப்புரவு மற்றும் பொதுப்பணியாளர் சங்கம், தமிழ்நாடு தூய்மை காவலர் பொது தொழிலாளர் சங்கம், கோவை மாவட்ட அண்ணா சுகாதார பணியாளர் சங்கம், தமிழ் நாடு நம்மவர் தூய்மை பணியாளர் தொழிற்சங்கம், பொதுப் பணி யாளர் சங்கம், தமிழ்நாடு தூய்மை காவலர் பொது தொழிலாளர் சங்கம், கோவை மாவட்ட அண்ணா சுகாதார பணியாளர் சங்கம், கோவை மாவட்ட டாக்டர் அம்பேத்கர் மக்கள் தூய்மை பணியாளர் சங்கம் ஆகிய சங்கத்தினர் பங்கேற்றனர்.
இதையொட்டி மாநகராட்சி அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இது குறித்து தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் சுகாதார துப்புரவு மற்றும் பொதுப்பணியாளர் சங்க மாநிலச் செயலாளர் தமிழ்நாடு செல்வம் கூறியதாவது:-
தனியாரிடம் ஒப்படைக்க கூடாது
கோவை மாநகராட்சியில் 3,600 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள், 2,500 நிரந்தர தூய்மை பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். இந்த நிலையில் கோவை மாநகரில் தூய்மை பணியை தனியார் வசம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர்.
அதோடு மாநகராட்சி சார்பில் டெண்டர் கோரப்பட உள்ளது. இதனால் தூய்மை பணி யாளர்கள் பாதிக்கப்படுவார்கள். நிரந்தர தொழிலாளர்களுக்கு பிறகு வாரிசு அடிப்படையில் வேலை கிடைக்காது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எனவே அரசாணை 152 -ஐ ரத்து செய்ய வேண்டும். தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் என வலியுறுத்தி காலவரை யற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளோம். அந்த திட்டத்தை கைவிடும் வரை போராட்டம் தொடரும். நேற்றைய போராட்டத்தில் 80 சதவீதம் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
குப்பைகள் தேங்கின
தூய்மை பணியாளர்கள் போராட்டம் காரணமாக நேற்று கோவை மாநகரில் பல இடங்களில் குப்பைகள் தேங்கின. தொடர்ந்து போராட்டம் நடக்க உள்ளதால் சுகாதார பணிகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இந்தநிலையில் தொழிற்சங்க பிரதிநிதிகள், தொழிலாளர்நலத்துறை அதிகாரிகளுடனும் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில் இதுவரை எந்த உடன்பாடும் ஏற்பட வில்லை. எனவே தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என்று தொழிற்சங்கத்தினர் கூறினர்.
இது போல் கோவை கலெக்டர் அலுவலகம் அருகே பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.