மாநகராட்சி அலுவலகத்தில் சுதந்திர தினவிழா

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.;

Update:2023-08-16 00:38 IST

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. மேயர் பி.எம்.சரவணன் தலைமை தாங்கி தேசிய கொடி ஏற்றினார். இதைத்தொடர்ந்து சிறந்த முறையில் பணியாற்றிய மாநகராட்சி அலுவலர்களுக்கும், தூய்மை பணியாளர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் துணை மேயர் கே.ஆர்.ராஜூ, ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, மண்டல தலைவர்கள் கதிஜா இக்லாம் பாசிலா, பிரான்சிஸ், ரேவதி பிரபு, மகேசுவரி, செயற்பொறியாளர் வாசுதேவன், உதவி ஆணையாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். பின்னர் மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

தச்சநல்லூர் 1-வது வார்டு மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் துணை மேயர் கே.ஆர்.ராஜூ கொடியேற்றினார். பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்