மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா

மத்திகிரி அரசு பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.;

Update:2022-08-28 22:16 IST

மத்திகிரி

மத்திகிரி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரவிக்குமார் வரவேற்றார். மாவட்ட கல்வி அலுவலர் முனிராஜ், துணை மேயர் ஆனந்தையா, கவுன்சிலர் மஞ்சுளா, மாநகர இளைஞரணி அமைப்பாளர் சுமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ., ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் 130 மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கினர்.

விழாவில் மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், மாவட்ட துணை செயலாளர் தனலட்சுமி, தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாரன், பகுதி செயலாளர்கள் ராமு, திம்மராஜ், மாநகர அவைத்தலைவர் செந்தில்குமார், துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் எல்ேலாரா மணி, சீனிவாசன், ராஜா, முனிரத்தினம்மா, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் முன்ராஜ், தமிழ் வளர்ச்சி மன்றத்தலைவர் அருள்தாஸ், மற்றும் பிரகாஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்