ரூ.4 கோடியில் சாலை புதுப்பிக்கும் பணி தீவிரம்
கோவில்பாளையம்-நெகமம் சாலையை ரூ.4 கோடியில் புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.;
கிணத்துக்கடவு
கோவில்பாளையம்-நெகமம் சாலையை ரூ.4 கோடியில் புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
குண்டும், குழியுமான சாலை
கிணத்துக்கடவு அருகே உள்ள கோவில்பாளையத்தில் இருந்து காளியண்ணன் புதூர், கக்கடவு வழியாக நெகமம் செல்லும் ரோடு உள்ளது. இந்த சாலை வழியாக திருப்பூர், பல்லடம், சுல்தான்பேட்டை, நெகமம் போன்ற பகுதிகளில் இருந்து கனரக வாகனங்கள் கேரளாவிற்கு சென்று வருகின்றன. இதனால் இந்த ரோடு பகல் மற்றும் இரவு நேரங்களில் போக்குவரத்து அதிக அளவில் காணப்படும்.
கிணத்துக்கடவில் இருந்து நெகமம் செல்வதற்கு இது முக்கிய சாலையாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சாலையில் பல இடங்களில் குண்டும், குழியுமாக காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வந்தனர்.
ரூ.4 கோடியில் புதுப்பிப்பு
இதனால் கோவில்பாளையம்-நெகமம் சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து நெடுஞ்சாலைத்துறையினர் இந்த சாலையை புதுப்பிக்க ரூ.4 கோடி ஒதுக்கினர். இதனைத்தொடர்ந்து இந்த சாலையை புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த பணிகள் விரைவில் முடிவடையும் என்று நெடுஞ்சாலைத்்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.