விநாயகர் சிலையுடன் வந்த இந்து மக்கள் கட்சியினர்

Update: 2022-08-29 16:58 GMT


திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் வினீத் தலைமையில் நடைபெற்றது. இந்து மக்கள் கட்சியினர் கையில் விநாயகர் சிலையை ஏந்தியபடி கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தனர். கூட்ட அரங்குக்குள் விநாயகர் சிலை கொண்டு செல்ல போலீசார் அனுமதிக்கப்படவில்லை. பின்னர் அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் தி.மு.க. அரசு கடும் நிபந்தனைகளை விதித்து வருகிறது. அரசு விதித்த விதிமுறைகளை தளர்வு செய்து விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வழிவகை செய்ய வேண்டும். இந்து மக்கள் கட்சியின் சார்பில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா, மண் வளத்தை பாதுகாக்க வேண்டி நடக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில் விநாயகர் சிலை பந்தலில் மண் வளத்தை பாதுகாக்க வேண்டி மரக்கன்று வழங்கப்பட உள்ளது. இதற்கு மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் கடும் நிபந்தனைகளை விதித்து அனுமதி தர மறுக்கிறது. முதல்-அமைச்சர் இதில் கவனம் செலுத்தி விநாயகர் சதுர்த்தியை சிறப்பாக கொண்டாட வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்