மோட்டார் சைக்கிளில் ஆயுதங்களுடன் சென்று மிரட்டல்; 10 பேர் மீது வழக்கு

சங்கரன்கோவிலில் மோட்டார் சைக்கிளில் ஆயுதங்களுடன் சென்று மிரட்டல் விடுத்ததாக 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.;

Update:2023-07-17 01:52 IST

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் ெரயில் நிலையம் அருகே உள்ளது திருப்பூர் குமரன் நகர். இங்கு அனைத்து தரப்பு மக்களும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு ஏராளமான இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்களில் ஆயுதங்களுடன் சென்றனர். தங்கள் சமுதாயத்தை பற்றி சமூக வலைத்தளங்களில் இழிவாக பதிவிட்டது யார்? எனக்கூறி தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனை அப்பகுதி மக்கள் தட்டிக் கேட்டபோது அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் 10-க்கும் மேற்பட்ட நபர்கள் மீது சங்கரன்கோவில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தை தொடர்ந்து அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்