கள்ளக்குறிச்சியில் தூக்கில் தொழிலாளி பிணம் கொலையா? போலீசார் விசாரணை

கள்ளக்குறிச்சியில் தூக்கில் தொழிலாளி பிணமாக கிடந்தார். அவரை யாரேனும் கொலை செய்தார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2023-04-22 00:15 IST

சின்னசேலம் அருகே நமச்சிவாயபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 50). தொழிலாளியான இவர் கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையம் பகுதியில் வாடகைக்கு ஒரு அறை எடுத்து தங்கி கட்டிட சென்டிரிங் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை ராஜா நகர் பகுதியில் உள்ள ஏரிக்கரையில் மரத்தில் கயிற்றால் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள், உடனே இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் போில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ராமச்சந்திரனின் உடலை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். இருப்பினும் அவரது சாவுக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.

போலீசார் விசாரணை

இதையடுத்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமச்சந்திரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் கொலை செய்து அவரை தூக்கில் தொங்க விட்டனரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்