திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வந்த காரைக்குடி பெண்ணிடம் நகை திருட்டு

திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வந்த காரைக்குடி பெண்ணிடம் நகை திருடுபோனது;

Update:2023-02-03 02:02 IST

திருப்பரங்குன்றம்

காரைக்குடி கம்பம் தெருவை சேர்ந்தவர் சுந்தரி (வயது 56).இவர் கடந்த 3 தினங்களுக்கு முன்பு திருப்பரங்குன்றம் கோவிலில் நடைபெற்ற தெப்பத்திருவிழாவுக்கு வந்து இருந்தார். அப்போது அவர் ஒரு பையில் 10 பவுன் நகையை வைத்தபடி சாமி கும்பிடுவதற்காக காத்திருந்தார். இந்த நிலையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம ஆசாமிகள், சுந்தரி பையில் இருந்த 10 பவுன் நகையை திருடி சென்று விட்டனர்.இது தொடர்பாக திருப்பரங்குன்றம் போலீசில் சுந்தரி புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து, நகை திருடிய ஆசாமிகளை தேடிவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்