நகை அடகு கடைக்காரர் தீக்குளித்து தற்கொலை

விக்கிரவாண்டியில் நகை அடகு கடைக்காரர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

Update: 2023-10-27 18:45 GMT


விக்கிரவாண்டி, 

விக்கிரவாண்டி கச்சையப்ப செட்டி தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 50). நகை அடகு கடை நடத்தி வந்தார். நேற்று மாலை இவரது, மனைவி சீதாதேவி கோவிலுக்கு சென்று இருந்தார். அப்போது வீட்டின் மொட்டை மாடியில் அமைத்துள்ள ஷெட்டுக்கு, சரவணன் சென்றார். அங்கு அவர் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதுபற்றி தகவல் அறிந்த விக்கிரவாண்டி தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தரேஸ்வரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். அதற்குள் சரவணன் தீயில் கருகி இறந்து விட்டார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இது பற்றி விக்கிரவாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்