நகை, செல்போன் பறித்தவர் கைது

நகை, செல்போன் பறித்தவரை கைது செய்தனர்.

Update: 2022-06-07 20:39 GMT

மதுரை, ஜூன்.8-

மதுரை சிலைமான் சத்யா நகரை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 24). எலக்ட்ரீசியன். சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் இளமனூர் வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை 2 பேர் வழிமறித்தனர். பின்னர் அவர்கள் கத்தியை காட்டி மணிகண்டனை மிரட்டி அவரிடமிருந்து 2 பவுன் சங்கிலி, செல்போன் மற்றும் 5 ஆயிரம் ரூபாயை பறித்து கொண்டு தப்பிவிட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் சிலைமான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் சக்கிமங்கலம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சந்தோஷ்(20), மதன்குமார் என்பது தெரியவந்தது. அதை தொடர்ந்து போலீசார் சந்தோசை கைது செய்தனர். மற்றொருவரை தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்