ஆரணியில் வேலை வாய்ப்பு முகாம்

ஆரணியில் வேலை வாய்ப்பு முகாம் இன்று நடக்கிறது.;

Update:2023-03-29 22:34 IST

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் ஆரணி மற்றும் மேற்கு ஆரணி வட்டாரத்தை சேர்ந்த 18 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண் இருபாலர்களுக்கும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் இன்று (வியாழக்கிழமை) ஆரணி டவுன் மாங்கா மரம் பஸ் நிறுத்தம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடக்கிறது.

முகாமில் 8,10,12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிகிரி மற்றும் நர்சிங் பயிற்சி முடித்த மாணவ, மாணவிகளுக்கு வேலை வாய்ப்பு உள்ளது என ஆரணி, மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய ஊரக வாழ்வாதார இயக்க பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்