கபடி பயிற்சியாளர் நியமிக்க வேண்டும்

மயிலாடுதுறை இந்திய விளையாட்டு ஆணையத்தில் கபடி பயிற்சியாளர் நியமிக்க வேண்டும் .;

Update:2023-08-22 00:15 IST

மயிலாடுதுறை ராஜன்தோட்டத்தில் இந்திய விளையாட்டு ஆணையத்தின் சார்பில் விளையாட்டு பயிற்சி மையம் இயங்கி வருகிறது. மத்திய அரசு கட்டுப்பாட்டிலுள்ள இந்த பயிற்சி மையத்தில் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக விடுதிகள் உள்ளன. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தடகளம், குத்துச்சண்டை, பளுதூக்குதல், கூடைப்பந்து, கபடி போன்ற பல்வேறு விளையாட்டுகளுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் கபடி விளையாட்டுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக பயிற்சியாளர் இல்லாமல் உள்ளது. இதனால் கபடி பயிற்சிக்கு மட்டும் மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்படாமல் இருப்பது மாணவர்களிடையே பெறும் ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி மைய நிர்வாகியிடம் கேட்டபோது கபடி பயிற்சி அளிக்கும் பயிற்சியாளர் பணியிடம் காலியாக உள்ளது. பயிற்சியாளர் நியமிக்கப்பட்ட உடன் விளையாட்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவித்தார். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான கபடி பயிற்சி அளிப்பதற்கான ஆசிரியரை உடனடியாக நியமனம் செய்து நடப்பாண்டு முதல் கபடி பயிற்சி அளிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விளையாட்டு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்