கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம்

கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் நடந்தது.

Update: 2022-06-11 18:00 GMT

வெள்ளியணை,

வெங்கட்ரமண சுவாமி கோவில்

கரூர் மாவட்டம், வெள்ளியணையில் பிரசித்தி பெற்ற கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் வைகாசி தேர் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 2-ந்தேதி அன்று சிறப்பு அபிஷேகத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து 3-ந்தேதி கொடியேற்றமும், பின்னர் ஒவ்வொரு நாளும் காலையில் சுவாமி பல்லக்கில் எழுந்தருளி திருவீதி உலாவும், இரவில் உபயதாரர்களின் ஏற்பாட்டில் அன்ன வாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், கருட வாகனம், 5 தலை நாக வாகனம், யானை வாகனம், திருக்கல்யாணம் பூமலர் வாகனம் என பல்வேறு வாகனங்களில் உற்சவ நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதைதொடர்ந்து சுவாமி பல்லக்கில் எழுந்தருளி ஜெகதாபி பெருமாள் கோவிலுக்கு செல்லும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அங்கு ஜெகதாபி மற்றும் சுற்று பகுதியை சேர்ந்த திரளான பொதுமக்கள் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து வழிபாடு செய்தனர். பின்னர் அன்றிரவு வெள்ளியணையில் வேடுபரி நிகழ்ச்சி நடைபெற்றது.

தேரோட்டம்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெற்றது. இதையடுத்து முதலில் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருள செய்யும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் நடந்தது.தேர் முக்கிய வீதிகள் வலம் வந்து நிலையை அடைந்தது.

தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்