பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய தொழிலாளி கைது

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொழிலாளி ஒருவர், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கத்தி கூச்சலிட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.;

Update:2026-01-01 22:03 IST

கன்னியாகுமரி மாவட்டம், பளுகல் அருகே மலையடி பகுதியை சேர்ந்தவர் சன்னி (வயது 56), கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று மலையடி பகுதியில் நின்றார். அப்போது அவர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கத்தி கூச்சலிட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகினர். அந்த சமயத்தில் அந்த வழியாக பளுகல் போலீசார் வந்தனர். பின்னர் தகராறில் ஈடுபட்ட சன்னியை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்