தாரமங்கலம்:-
தாரமங்கலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கண்ணனூர் மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. தீர்த்தகுட ஊர்வலம், விரத நிகழ்ச்சிகளை தொடர்ந்து நேற்று 3-வது நாளாக 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்தும், பொங்கல் வைத்து கோழி பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து மாவிளக்கு ஊர்வலம், பூந்தேரில் அம்மன் வீதிஉலா, அலகு குத்துதல். ஆகாய விமானம் அலகுகுத்தி பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர்.
இரவு தாரை ஏஞ்சல் நண்பர்கள் குழு சார்பில் நகைச்சுவை பாட்டு பட்டிமன்றம் நடைபெற்றது. விழாவில் இன்று (வியாழக்கிழமை) மதியம் 12 மணி அளவில் பூந்தேர் ஊர்வலம். நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 3 மணி அளவில் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி குதிரை வாகனத்தில் அம்மன் திருமஞ்சள் நீராட்டு வீதிஉலா நடக்கிறது.
இதையடுத்து அருணாச்சல முதலியார் மக்கள் மன்றம். ஸ்ரீ அம்மன் திருவருள் நற்பணி மன்றம் சார்பில் சிந்தனை பாட்டு பட்டிமன்றம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கட்டளைதாரர்கள் இனியன் பூவேல், நாட்டு நாட்டாண்மைக்காரர், தாரமங்கலம் நகராட்சி தலைவர் குணசேகரன், செயல் அலுவலர் புனிதராஜ் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.