கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

சிதம்பரம் அருகே கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Update: 2023-02-01 20:10 GMT

புவனகிரி, 

சிதம்பரம் அருகே பள்ளிப்படை பகுதி வண்டிகேட் மெயின் ரோட்டில் உள்ள கற்பக விநாயகர் கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர். அதன்படி கோவிலில் புனரமைப்பு பணிகள் நடந்து முடிந்ததையடுத்து கும்பாபிஷேக விழா தொடங்கியது.

இதையொட்டி கற்பக விநாயகருக்கு முதல் மற்றும் இரண்டாம் கால யாக சாலை பூஜை நடந்தது. பின்னர் கோ பூஜை செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து புனிதநீர் அடங்கிய கடம் புறப்பாடு நடந்ததும், கற்பக விநாயகர் கோவில் கோபுரத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அங்கு திரண்டிருந்த பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதில் பாண்டியன் எம்.எல்.ஏ., முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருள், ஒன்றிய கவுன்சிலர் சித்ரா பாலசுப்பிரமணியம் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழு உறுப்பினர்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்