ரூ.3 லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் ஏலம்

அறந்தாங்கியில் ரூ.3 லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் ஏலம் போனது.;

Update:2023-09-09 00:00 IST

அறந்தாங்கி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் மூலம் ராஜேந்திரபுரம் தென்னை வணிக வளாகத்தில் வாரந்தோறும் புதன்கிழமை கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 16 விவசாயிகள் 4,016 கிலோ கொப்பரை தேங்காயை கொண்டு வந்தனர். இதில், அதிகபட்சமாக கிலோ ஒன்றுக்கு ரூ.78-ம், குறைந்தபட்சம் ரூ.76-க்கும் கொப்பரை தேங்காய் ஏலம் போனது. இந்த ஏலத்தில் கலந்து கொண்ட வியாபாரிகள் போட்டி போட்டு கொப்பரைகளை ஏலம் எடுத்தனர். இதனால் ரூ.3 லட்சத்து 10 ஆயிரத்து 258-க்கு கொப்பரை ஏலம் போனதாக அறந்தாங்கி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் கண்காணிப்பாளர் குணசேகரன் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்