கிருஷ்ணகிரி: பாம்பாறு அணை முழு கொள்ளளவை எட்டியது - விவசாயிகள் மகிழ்ச்சி

ஊத்தங்கரையில் அமைந்துள்ள பாம்பாறு அணை முழு கொள்ளளவை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2022-07-22 15:24 GMT

ஊத்தங்கரை,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரங்களில் பெய்த கனமழையின் காரணமாக கிடுகிடு என பாம்பாறு அணை உயர்ந்தது.பாம்பாறு அணை நீர்மட்டம்முழு கொள்ளளவான 19.60 அடியை எட்டியதை அடுத்து வினாடிக்கு 1000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தற்சமயம் அணைக்கு வினாடிக்கு 1000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஐந்து  மதகுகள் கொண்ட பாம்பாறு அணையில் இரண்டு மதகுகள் வழியாக வரும் நீரை அப்படியே வினாடிக்கு 1000 கன அடி தண்ணீர் வெளியேற்றி வருகின்றனர்.

மேலும், பாம்பாறு ஆற்றுப்படுகை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை பொதுப்பணித்துறை மூலம் வழங்கப்பட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்