சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு

பழனி கல்வி மாவட்ட அளவிலான, குறுவட்ட இறகுபந்து மற்றும் பேட்மிட்டன் போட்டிகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.;

Update:2023-09-27 05:00 IST

பழனி கல்வி மாவட்ட அளவிலான, குறுவட்ட இறகுபந்து மற்றும் பேட்மிட்டன் போட்டிகள் வேடசந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதில் 14, 17 மற்றும் 19 வயதினருக்கான ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் கலந்து கொண்ட தங்கம்மாபட்டி சக்திசாய் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர். இந்த மாணவர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களை பள்ளி தாளாளர் சாந்தி ஸ்ரீதரன் பாராட்டி பரிசுகளை வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்