சென்னிமலை அருகே ரோட்டோரத்தில் மூட்டை, மூட்டையாக கொட்டப்பட்ட கழிவுகள்
சென்னிமலை அருகே ரோட்டோரத்தில் மூட்டை, மூட்டையாக கொட்டப்பட்ட கழிவுகள்;
சென்னிமலை
சென்னிமலை-காங்கேயம் மெயின் ரோட்டில் தினமும் பஸ், லாரி உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இங்குள்ள வெப்பிலி பிரிவு என்ற இடத்தின் அருகே செல்லும் கீழ்பவானி வாய்க்கால் பகுதியில் உள்ள ரோட்டோரத்தில் மூட்டை, மூட்டைகளாக ஏராளமான கழிவுகளை கொட்டியுள்ளனர். இதனால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து தற்சார்பு விவசாயிகள் சங்க தலைவர் கி.வே.பொன்னையன் கூறும்போது, 'கீழ்பவானி வாய்க்காலின் உபநீர் செல்லும் கால்வாய் மற்றும் ரோட்டோரங்களில் மூட்டை, மூட்டைகளாக கழிவுகளை போட்டு வருகின்றனர். இதனால் உபரி நீரில் கழிவுகள் கரைந்தால் நீர், நிலைகள் மாசுபட்டு சுற்றுச்சூழலும் பாதிக்கப்படும். பேக்கரி கடை கழிவுகளையும் அதிக அளவில் இங்கு கொண்டு வந்து போட்டுள்ளனர். தொடர்ந்து இப்படியே கழிவுகளை போட்டு வந்தால் அந்த பகுதி குப்பை மலையாக மாறிவிடும். அதனால் சுற்றுச்சூழல் மாசுபடாமல் இருக்க ரோட்டோரம் கழிவுகளை கொட்டுவதை உடனடியாக தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.