அறந்தாங்கியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

அறந்தாங்கியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update:2023-04-27 00:37 IST

வழக்கறிஞர் சங்கத்தின் (எ.ஐ.எல்.யு.) தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அகில இந்திய வழக்கறிஞர் சங்க புதுக்கோட்டை மாவட்ட துணை தலைவர் ஜான்சி மகாராணி தலைமையில் நேற்று கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வழக்கறிஞர்கள் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக்குவதன் அவசியத்தை விளக்கி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடும் மொழியாக அறிவிக்க கோரி கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்