ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் நேற்று ஜோலார்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பொன்னேரி அருகே சின்னபொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 55) என்பவர் வீட்டில் போலீசார் சோதனை செய்தனர். அங்கு டாஸ்மாக் மதுபாட்டில்கள் மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து ரவிச்சந்திரனை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவரிடமிருந்து மதுபாட்டில்கள் போலிசார் பறிமுதல் செய்தனர்.