மதுபாட்டில்கள் கடத்தியவர் கைது

கீழ்கொடுங்காலூரில் மதுபாட்டில்கள் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.;

Update:2023-07-14 19:30 IST

வந்தவாசி

வந்தவாசி அருகே கீழ்கொடுங்காலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி மற்றும் போலீசார் கொவளை கூட்ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்தவரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அவர் மதுபாட்டில்களை கடத்திச் செல்வது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த வினோத் (வயது 38) என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத்தை கைது செய்தனர்.

மேலும் அவரிடம் இருந்து 40 மதுபாட்டில்கள் மற்றும் மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்