உடுமலை நகர்மன்ற கூட்டத்தில் நகராட்சிக்கு லட்சினை வெளியீடு

உடுமலை நகர்மன்ற கூட்டத்தில் நகராட்சிக்கான லட்சினை (லோகோ) வெளியிடப்பட்டது.

Update: 2023-02-16 17:01 GMT

உடுமலை நகர்மன்ற கூட்டத்தில் நகராட்சிக்கான லட்சினை (லோகோ) வெளியிடப்பட்டது.

நகர்மன்ற கூட்டம்

உடுமலை நகராட்சியின் நகர்மன்ற சாதாரணக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு நகர்மன்றத் தலைவர் மு.மத்தீன் தலைமை தாங்கினார். ஆணையாளர் சத்தியநாதன், துணைத் தலைவர் கலைராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், குட்டை திடலில் ரூ.8 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் அமையவுள்ள அண்ணா கலையரங்கத்துக்கான செலவினத்தை வருவாய் நிதியில் மேற்கொள்வது என்பன உள்ளிட்ட 148 தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டன. மேலும் 33-வது வார்டு உறுப்பினர் வேலுச்சாமி, நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ளஐ.எம்.ஏ ஹால் இடத்தை மீட்டு நகராட்சி பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அந்த இடத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகர்மன்றத் தலைவர் மத்தீன் உறுதியளித்தார்.

லட்சினை வெளியீடு

1918-ம் ஆண்டு உருவாக்கப்பட்டு 100 ஆண்டுகள் கடந்த உடுமலை நகராட்சியின் பெருமைகளை விளக்கும் வகையிலான லச்சினை (லோகோ) வெளியிடப்பட்டது. இந்த லோகோவில் உடுமலை மண்ணின் பெருமையை விளக்கும் வகையிலான மாரியம்மன் கோவில் தேர், உடுமலை நகராட்சி தாகூர் கட்டிடம் மற்றும்திருமூர்த்தி அணை ஆகியவை இடம் பெற்றிருந்தது.

அத்துடன் உடுமலை மக்களுக்கு கைகொடுத்து வரும் வேளாண்மை, காற்றாலை ஆகியவையும் இடம் பிடித்திருந்தது. இதனைச் சுற்றி புத்தகங்களால் வளையம் அமைத்து கல்வியின் பெருமையை பறைசாற்றும் விதமாக அமைந்திருந்தது அனைவரையும் கவர்ந்தது.

Tags:    

மேலும் செய்திகள்