லாட்டரி சீட்டு விற்றவர் கைது

பாவூர்சத்திரம் அருகே லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2023-09-02 00:15 IST

பாவூர்சத்திரம்:

கீழப்பாவூர் பகுதியில் கேரள லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக பாவூர்சத்திரம் போலீசார் தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தியதில் கீழப்பாவூர் பால்பண்ணை தெருவில் பலசரக்கு கடை நடத்தி வந்த குறும்பலாபேரி பூபாலசமுத்திரம் தெருவை சேர்ந்த ஜோசப் (வயது 73) என்பவர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து ரூ.35 ஆயிரம் மதிப்பிலான 874 லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்