தர்மபுரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
தர்மபுரி
அரூர் அருகே உள்ள நெருப்பாண்டகுப்பம் பகுதியை சேர்ந்தவர் ராகவன் (வயது 25). இவரும், அதே பகுதியை சேர்ந்த நந்தினி (22) என்பவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களுடைய காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறிய நேற்று தர்மபுரி அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள அம்பேத்கர் சிலை முன்பு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். அங்கு நந்தினி அளித்த மனுவில், குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.