காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

உவரி அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2023-07-07 01:39 IST

திசையன்விளை

நெல்லை மாவட்டம் உவரி அருகே உள்ள கோடாவிளை வடக்கு தெருவை சேர்ந்தவர் ரூபன் (வயது 35). இவரது மனைவி இளவரசி. இவர்கள் காதல் திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

ரூபனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் சம்பவத்தன்று ரூபன் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் வரக்தி அடைந்த ரூபன் வீட்டு மாடியில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து அவரது மனைவி உவரி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பிரேமா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Tags:    

மேலும் செய்திகள்