மதுரை: குழந்தைகள் வார்டில் பெயர்ந்து விழுந்த மேற்கூரை.. நொடி பொழுதில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில், கட்டிட மேற்கூரை பெயர்ந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.;

Update:2022-08-21 16:59 IST

மதுரை,

மதுரை மாநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. இந்நிலையில் மழை காரணமாக, அரசு ராஜாஜி மருத்துவமனையின் பல்வேறு இடங்களில், மேற்கூரைகள் பெயர்ந்து விழுந்தன.

குறிப்பாக மூன்றாவது தளத்தில் உள்ள புற்றுநோய் அறுவை சிகிச்சை பிரிவில், மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் மருத்துவக் கருவிகள் சேதமடைந்தன. இதேபோல குழந்தைகள் வார்டிலும் மேற்கூரை பெயர்ந்து விழுந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

இதனால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின், 50 ஆண்டுகள் பழமையான கட்டிடங்களை புனரமைக்கவும், புதிய கட்டிடங்களை கட்டவும் கோரிக்கைகள் வலுவடைந்துள்ளன.

 

Tags:    

மேலும் செய்திகள்