கணபதி கோவிலில் மகாலட்சுமி பூஜை

கணபதி கோவிலில் மகாலட்சுமி பூஜை நடைபெற்றது.;

Update:2022-09-01 22:29 IST

தேவகோட்டை,

தேவகோட்டை அருகே திருமணவயல் உடையார் குடியிருப்பில் உள்ள தியான ஸ்தூபியின் மேலே அமைந்துள்ள மகாகணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா ஹோமத்துடன் தொடங்கியது. கணபதிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தன.

தொடர்ந்து அபிராமி அந்தாதி முற்றோதல் நடந்தது. மாணவர்களுக்கு திருக்குறள், விளையாட்டு போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. வள்ளி பாலகிருஷ்ணன் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக திருவிளக்கு பூஜையும், மகாலட்சுமி பூஜையும் நடைபெற்றது. அறக்கட்டளை சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கர்ணன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்