வாய்க்காலில் ஆண் பிணம்

ஒரத்தநாடு அருகே வாய்க்காலில் ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2023-09-09 01:53 IST

ஒரத்தநாடு:

ஒரத்தநாட்டை அடுத்துள்ள மூர்த்தியம்பாள்புரம் வடசேரி வாய்க்காலில் நேற்று முன்தினம் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் தண்ணீரில் அடித்து வரப்பட்டு கரை ஒதுங்கி கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ஒரத்தநாடு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி ஒரத்தநாடு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்