விஜய் கட்சியில் இணைந்தது ஏன்? நாஞ்சில் சம்பத் பரபரப்பு பேட்டி
பரப்புரை செய்வதற்கு விஜய் எனக்கு அனுமதி அளித்துள்ளார் என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்;
சென்னை,
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் நாஞ்சில் சம்பத் இன்று இணைந்தார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது,
அறிவாலயத்தில் இருந்து என்னை வசைபாடினார்கள்.என்னை வசைபாடியதால் நான் மனதளவில் உடைந்து போனேன் . திமுகவின் அறிவுத்திருவிழாவில் என்னை திட்டமிட்டு நிராகரித்தனர். 6 ஆண்டுகளாக எந்த அரசியல் கட்சியிலும் இணையவில்லை. பெரியார் , அண்ணா இலட்சியங்களை பேசி வந்த நான் இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துளேன். புதிதாய் பிறந்ததை போல் எண்ணி பூரிக்கிறேன்.
தமிழ்நாட்டில் இனி பேசுவதற்கு நிறைய உள்ளது. பரப்புரை செய்வதற்கு விஜய் எனக்கு அனுமதி அளித்துள்ளார். என்னை முடக்கி வைத்திருந்தனர். இயக்குவதற்கான வாய்ப்பை விஜய் தந்துள்ளார் இளைஞர்களை வைத்து அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டம் விஜய்யிடம் உள்ளது. என தெரிவித்தார்.