ஆலந்துறையார் கோவிலில் மண்டலாபிஷேக விழா

ஆலந்துறையார் கோவிலில் மண்டலாபிஷேக விழா நடைபெற்றது.;

Update:2023-07-16 00:00 IST

அரியலூர் சிவன் கோவில் தெருவில் உள்ள ஆலந்துறையார் அருந்தவ நாயகி கோவில் கும்பாபிஷேகம் கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி நடைபெற்றது. இதையொட்டி மண்டலாபிஷேக விழா நேற்று நடந்தது. காலை சிறப்பு யாகங்கள் செய்யப்பட்டு மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை சுற்று பிரகாரத்தில் கர்நாடக இசை கச்சேரிகள், பாட்டு, பட்டிமன்றம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை ஓம் நமச்சிவாயா அறக்கட்டளை குழுவினர் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்