மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நெல்லையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update:2023-07-27 01:14 IST

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திசையன்விளை அருகே வாலிபர் முத்தையா கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நெல்லை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் ஸ்ரீராம் தலைமை தாங்கினார். இதில் மாதர் சங்க மாநில செயலாளர் வாலன்டினா, மாவட்ட குழு உறுப்பினர் பழனி, சி.ஐ.டி.யு. தொழிற்சங்க நிர்வாகிகள் மோகன், மற்ெறாரு மோகன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி சுடலைராஜ், ஆதித்தமிழர் பேரவை கலைக்கண்ணன், தமிழ்ப்புலிகள் கட்சி தமிழரசு, திராவிட தமிழர் கட்சி கதிரவன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் முத்தையா கொலை வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள மதியழகன், பிரகாஷ் ஆகியோரின் குடும்பத்தினரும் கலந்துகொண்டனர். அவர்கள் 2 பேரும் கொலை சம்பவத்தில் ஈடுபடவில்லை. பொய்யாக கைது செய்து விட்டார்கள். எனவே அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கூறினார்கள்.

இதுதவிர கொலை செய்யப்பட்ட முத்தையாவின் உடலை நேற்று 3-வது நாளாக குடும்பத்தினர் வாங்கவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்