மாற்றுத்திறன் மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம்

மாற்றுத்திறன் மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது.

Update: 2023-10-22 19:44 GMT

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார வள மையத்தின் சார்பில் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெற்றது. முகாமில் மனவளர்ச்சி செவித்திறன் குறைபாடு, பார்வை குறைபாடு, உடல் இயக்க குறைபாடு உள்ள மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீடு செய்யப்பட்டது. இதையடுத்து உபகரணங்கள் தேவைப்படுவோருக்கான அளவீடும் செய்யப்பட்டது. முகாமில் ஆர்.சி. மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் மற்றும் பங்குத்தந்தை சந்தன சகாயம், உதவி பங்குத்தந்தை செல்வநாயகம், தலைமை ஆசிரியர் மங்களரோஸ் மேரி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன், மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிகல்வி திட்ட அலுவலர் சிவசக்தி கணேஷ் குமார் ஆகியோர் உத்தரவின் பேரில் வட்டார வள மையம் மேற்பார்வையாளர் (பொறுப்பு) மருதக்காளை, இயன்முறை மருத்துவர்கள், ஆசிரிய பயிற்றுனர்கள், சிறப்பு ஆசிரியர்கள் ஆகியோர் செய்திருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்