மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்
சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்;
சீர்காழி:
சீர்காழி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முகாமிற்கு சீர்காழி அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் அருண் ராஜ்குமார் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் எலும்பு முறிவு டாக்டர் மகேஷ், கண் டாக்டர் பூபேஷ் தர்மேந்திரா, மனநல டாக்டர் தினேஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, 43 மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனை செய்தனர். பின்னர் தகுதியான மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளை தலைமை டாக்டர் வழங்கி பேசினார். இந்த முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் (பொறுப்பு) பாபு, மாற்றுத்திறனாளி சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.