பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ முகாம்

காய்ச்சல் பாதிப்பால் வருகை குறைந்தது. இதனால் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ முகாம் நடந்தது.

Update: 2022-09-22 18:45 GMT

நெகமம், 

கிணத்துக்கடவு தாலுகாவில் குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு மாணவர்கள் வருகை வெகுவாக குறைந்து உள்ளது. தொடர் மழை மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக கிணத்துக்கடவு வட்டார பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் சளி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருவதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். இதையடுத்து சுகாதாரத்துறை சார்பில், பள்ளிகளில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நெகமம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், பள்ளிகளில் மருத்துவ முகாம் நடந்தது. டாக்டர்கள் பள்ளி மாணவ-மாணவிகள், அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளுக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொண்டனர். மேலும் அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்கினர். பள்ளி வளாகங்கள், குடியிருப்பு பகுதிகளில் கொசு மருந்து அடிக்கப்பட்டு வருகிறது. நன்றாக காய்ச்சிய குடிநீரை அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. நெகமம் பேரூராட்சி சார்பில், அனைத்து இடங்களிலும் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்