மருத்துவ பரிசோதனை முகாம்

புளியங்குடியில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.

Update: 2022-12-10 18:45 GMT

புளியங்குடி:

புளியங்குடி புன்னையாபுரம் பெட்ரோல் பங்க்கில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் விற்பனை மேலாளர் சதீஷ் தலைமை தாங்கினார். டாக்டர் ஹேமா மேரி முன்னிலை வகித்தார். முகாமில் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மருத்துவக்குழுவினர், பொதுமக்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்தனர். நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், இ.சி.ஜி. போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன. செல்வமேரி ஜேம்ஸ் நன்றி கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்