மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கான உறுப்பினர் சேர்க்கை கட்டணம் அறிவிப்பு

வாசகர்கள் உரிய ஆவணங்களுடன் நேரடியாக வருகை தந்து நூலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2024-01-30 19:34 IST

மதுரை,

மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் இருந்து வீட்டிற்கு புத்தகங்களை எடுத்துச் செல்ல உறுப்பினர் சேர்க்கை கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் உறுப்பினராக விரும்பும் வாசகர்கள், ஆவணங்களுடன் உரிய படிவத்தை பூர்த்தி செய்து நேரடியாக வருகை தந்து நூலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புகைப்படம், அரசால் அங்கீகரிக்கப்பட்ட முகவரி மற்றும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை நகல் ஆகியவற்றைக் கொடுத்து உறுப்பினராகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனி நபருக்கு உறுப்பினர் கட்டணம் 250 ரூபாய், ஆண்டு சந்தா 100 ரூபாய் முதல் 350 ரூபாய் வரை செலுத்தினால் படிப்பதற்கு 4 புத்தகங்களை எடுத்துச் செல்லலாம் எனவும், மாணவ மாணவியருக்கு உறுப்பினர் கட்டணம், ஆண்டு சந்தா 150 ரூபாய் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்