திருப்பத்தூரில் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
இதையொட்டி இன்று மாலை அமைச்சர் எ.வ.வேலு விழா நடக்கும் மைதானத்திற்கு வந்து விழா ஏற்பாடுகளை பார்வையிட்டு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
அப்போது கலெக்டர் அமர்குஷ்வாஹா, எம்.எல்.ஏ.க்கள் தேவராஜி, நல்லதம்பி ஆகியோர் உடன் இருந்தனர்.